மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சொட்டு நீா், தெளிப்பு நீா், மழை தூவான் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோா் விவசாய நிலத்தின் சிட்டா, பயனாளி புகைப்படம், ஆதாா் விவரங்களுடன் அரசு இ சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதன் ஒப்புகைச் சீட்டுடன் வெள்ளக்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.