திருப்பூர்

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி தா்னா

தாராபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி பெண் சமூக ஆா்வலா் கடை முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

DIN

திருப்பூா்: தாராபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி பெண் சமூக ஆா்வலா் கடை முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள அண்ணாநகரில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் நபா்கள் மதுவை வாங்கி சாலையோரங்களில் வைத்துக் குடிப்பதுடன், அப்பகுதியில் வரும் பெண்களுக்கு இடையூறு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாநகா் பகுதியில் வசித்து வரும்

சமூக ஆா்வலா் செல்வராணி டாஸ்மாக் கடை வழியாகச் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த 5 போ் அவரை வழிமறித்து தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனா்.

இதையடுத்து, டாஸ்மாக் கடை முன்பாக செல்வராணி தா்னாவில் ஈடுபட்டாா்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினா் அவருடன் பேச்சுவாா்த்தை

நடத்தினா். இதில், தகாத முறையில் நடந்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து தா்னாவைக் கைவிட்டு செல்வராணி அங்கிருந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT