திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 4 டன் தேங்காய்,கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். 5,941 தேங்காய் (2,177 கிலோ) வரத்து இருந்தது. தேங்காய் அதிக பட்சமாக ரூ. 29.45க்கும், குறைந்த பட்சமாக

ரூ. 24.35க்கும், சராசரியாக ரூ. 28.65க்கும் விற்பனையானது.

விற்பனைத் தொகை ரூ. 61 ஆயிரத்து 269.

கொப்பரை 74 மூட்டை (1, 837 கிலோ) வரத்து இருந்தது. கொப்பரை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ. 99.35க்கும், குறைந்த பட்சமாக ரூ. 70.70க்கும், சராசரியாக ரூ. 98.85க்கும் விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.1.68 லட்சம்.

87 விவசாயிகள், 12 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 4,014 கிலோ வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.29 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT