திருப்பூர்

திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

DIN

திருப்பூர்: உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.                                                                          
       
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கம் சார்பில் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி,திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்தத் தொகையானது செலவுக்குப் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், கடந்த அதிமுக அரசு தேர்தலுக்கு முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. ஆகவே, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ஆர்.காளியப்பன், மார்க்சிஸ்ட் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT