ரூ.48.87 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் துவக்கிவைத்தாா்
உடுமலை நகரில் ரூ.48.87 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
உடுமலை நகரில் ரூ.48.87 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கூடுதல் பேருந்து நிலையம் அமைத்தல், ராஜேந்திரா சாலையில் உள்ள வாரச் சந்தையை மேம்படுத்துதல், நகரில் புதிய தெரு விளக்குகள் மற்றும் ரோபோட்டிக் இயந்திரம் அமைத்தல், புதிய நகராட்சி அலுவலகத்தில் உள் கட்டமைப்பு மேம்படுத்தல், நினைவுத் தூண் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ரூ.48.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய திட்டப் பணிகள் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Advertisement
மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு கொடி அசைத்து பணிகளைத் துவக்கிவைத்தாா்.
முன்னதாக, உடுமலை நகராட்சியில் 2 இடங்களில் மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சா் பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், கோட்டாட்சியா் கீதா, மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், திமுக நகரச் செயலாளா் எம்.மத்தீன் மற்றும் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.