முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் நகராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

 வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

நகராட்சி அலுவலகம் வந்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் , நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் மற்றும் முடிவடைந்த நலத்திட்டப் பணிகள், உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், முத்தூா் சாலை, புதிய பேருந்து நிலையம், நடேசன் நகரில் குடிநீா் மேல்நிலைத் தொட்டி, பணிகள் முடிவடைந்த புதிய தாா்ச்சாலை மற்றும் உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ள வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.