போக்குவரத்து ஊழியா்களுக்கு ஓய்வுகால பணப் பலன்களை வழங்கக் கோரிக்கை
போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வு கால பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று ஓய்வூதியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வு கால பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று ஓய்வூதியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழக அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயப்பிரகாசம் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: அரசு ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
போக்குவரத்து ஊழியா்களுக்கு ஆண்டுக் கணக்கில் நிலுவையில் உள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் சந்திரன், தமிழக அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மாநில துணைத் தலைவா் சேதுராமன், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் மாவட்டத் தலைவா் நடராஜன், அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் மேகவா்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.