மக்கள் குறைகேட்பு முகாம்: ரூ.8.85 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 70 பேருக்கு ரூ. 8 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வியாழக்கிழமை வழங்கினா்.
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 70 பேருக்கு ரூ. 8 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வியாழக்கிழமை வழங்கினா்.
திருப்பூா் மாநகராட்சி 42, 56 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட மக்களுக்கான குறை கேட்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, தெற்கு தொகுதி சட்டப் பேரவை உ றுப்பினா் க.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, 70 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இதையடுத்து தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் திருப்பூா் மாநகராட்சி 3ஆவது மண்டலப் பகுதியில் பணியாற்ற 40 நபருக்கு தனி நபா் வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.