முகப்பு
திருப்பூர்

எம்.ஜி.ஆா். நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சாா்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சாா்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சேவூரில் அமைக்கப்பட்டிருந்த

எம்ஜிஆா் உருவப் படத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் சேவூா் ஜி.வேலுசாமி (வடக்கு), அ.ஜெகதீசன் (மேற்கு) உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காங்கயத்தில்...

காங்கயம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரச் செயலா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் அதிமுகவினா் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், மாவட்டப் பொருளாளா் கேஜிகே.கிஷோா்குமாா், காங்கயம் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் சி.கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவிலில் புதிய நீதிக் கட்சியின் சாா்பில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் கே.தங்கத்தம்பி தலைமையில் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.