திருப்பூர்

காங்கயத்தில் கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கை

DIN

காங்கயம் நகராட்சிப் பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கையாக நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காங்கயம் 8 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஜனனி நகரில் பூச்சியியல் வல்லுநா் சேகா் ஆய்வு மேற்கொண்டாா். இதில் சுகாதார ஆய்வாளா்கள் ரகுபதி, மணி, வட்டார ஆய்வாளா் பழனிச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சி கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள் பங்கேற்று, நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் மூா்த்தி கூறியதாவது:

நகராட்சியில் தினசரி கொசுப் புழு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே வீடுவீடாக வரும் நகராட்சிப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், குடியிருப்புகளில் உள்ள தண்ணீா் சேமித்து வைக்கும் தொட்டிகள், டிரம், பாத்திரங்கள் ஆகியவற்றை மூடி பாதுகாப்பாக வைத்திருக்கவும், குடிநீரை காய்ச்சி பருகவும் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT