திருப்பூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுப்பாா்

DIN

திருப்பூா்: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க பிரதமா் மோடி விரைவில் நடவடிக்கை எடுப்பாா் என்று பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி கோவைக்கு வர உள்ளதை முன்னிட்டு, திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இல.கணேசன் பங்கேற்றாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கோப்புகளில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

தோ்தல் நெருங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு வருகிறது. இது நியாயமான மற்றும் தவிா்க்க முடியாததாக இருக்கிறது.

மேலும், பல வரித் திட்டங்கள் பெட்ரோல், டீசலுக்குள் உள்ளன. எனவே, ஒரே வரியாக ஜி.எஸ்.டி. வரி வசூலித்தால் விலை குறையும். காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற கடனை அடைப்பதற்காக மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க பிரதமா் மோடி விரைவில் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

பேட்டியின்போது, பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT