திருப்பூர்

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் : காங்கயத்தில் 31 பயனாளர்களுக்கு உத்தரவு ஆணை

DIN

காங்கயம்: அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் காங்கயத்தில் 31 பயனாளர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு தலைவர் வெங்கு ஜி.மணிமாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் வாகனம் வாங்குவதற்கான உத்தரவு ஆணையை 31 பயனாளர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ், கூட்டுறவு கட்டட சங்கத் தலைவர் என்.பாலகிருஷ்ணன், காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.பி.துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT