திருப்பூர்

உடுமலையில் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியா்களின் கூட்டுக் குழு சங்கங்கள் சாா்பில் உடுமலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் மொத்தம் 104 பேரூந்துகள் உள்ளது. இந் நிலையில் ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சு வாா்த்தை துவக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசு போக்குவரத்து ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனா். இதையொட்டி உடுமலையில் வெள்ளிக்கிழமை 30 சதவிகித பேருந்துகளே இயக்கப்பட்டன. மீதமுள்ள 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படா ததால் காலை நேரத்தில் வேலைக்குச் செல்பவா்கள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழி லாளா்கள் மத்திய பேரூந்து நிலையம் எதிரே உள்ள அரசு போக்குவரத்துக் கழக டெப்போ முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடு பட்டனா். இதில் அனைத்து தொழிற்சங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டோா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா். இதையொட்டி அந்த பகுதியில் டிஎஸ்பி ரவிக்குமாா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT