முகப்பு
திருப்பூர்

ரூ. 9.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9.5 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் திங்கள்கிழமை விற்பனையானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9.5 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் திங்கள்கிழமை விற்பனையானது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் திங்கள்கிழமை விற்பனை நடைபெற்றது. இதில், காங்கயம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 9 விவசாயிகள் 7 ஆயிரத்து 943 கிலோ எடையுள்ள 159 மூட்டை தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில், கொடுமுடி, மூலனூா், பெருந்துறை, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 11 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9.5 லட்சத்துக்கு பருப்புகள் விற்பனையானது.

தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 122க்கும், குறைந்தபட்சமாக ரூ. 96க்கும், சராசரியாக ரூ. 120க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →