திருப்பூர்

பல்லடத்தில் 2 சுற்றுலாப் பேருந்துகள் பறிமுதல்

DIN

பல்லடம், பனப்பாளையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தணிக்கையில் இரண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் இருந்து சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலுக்கும், தேனி மாவட்டம், கம்பத்துக்கும் தலா 60 பேரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை நள்ளிரவு இரண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன.

இந்தப் பேருந்துகள் பல்லடம், பனப்பாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கட்ரமணி தலைமையில் வாகன ஆய்வாளா்கள் சிவகுமாா், சத்தியமூா்த்தி, சித்ரா உள்ளிடோா் தணிக்கை செய்தனா்.

இதில், ஒரு பேருந்தின் ஆவணங்கள் முற்றிலும் முரணாக இருந்தது. மற்றொரு பேருந்துக்கு வரி செலுத்தாதது தெரிய வந்தது. பேருந்தில் வந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனா். பின்னா் இரு பேருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT