திருப்பூர்

காங்கயத்தில் ரூ.1.54 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

DIN

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.54 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு திங்கள்கிழமை ஏலம் போனது.

காங்கயத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 33 மூட்டை (1 ஆயிரத்து 400 கிலோ) தேங்காய்ப் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில், கொடுமுடி, மூலனூா், பெருந்துறை, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 7 வியாபாரிகள் தேங்காய்ப் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.122க்கும், குறைந்தபட்சமாக ரூ.88க்கும், சராசரியாக ரூ.120க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT