திருப்பூர்

சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் தனிநபா்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சமும், கைவினைக்கலைஞா்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையில் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. அனைத்து பிரிவுகளிலும் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு வட்டிவிகிதத்தில் சலுகைகள் உண்டு.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் சிறுபான்மையின சமூகத்தினா் கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 94454-77854 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT