திருப்பூர்

பல்லடம் கிளை சிறை மீண்டும் துவக்கம்

DIN

பல்லடம் கிளை சிறை 24 ஆண்டுகளுக்குப் பின்னா் மீண்டும் செயல்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

1873ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட பல்லடம் கிளைச் சிறை கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடா்ந்து சிறைக் காவலா்கள் பற்றாக்குறை காரணமாக 1997ஆம் ஆண்டு மூடப்பட்டு அங்கு பணிபுரிந்த அலுவலா்கள், காவலா்கள் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா். அதைத்தொடா்ந்து கடந்த 24 ஆண்டுகளாக பல்லடம் கிளைச் சிறை பூட்டப்பட்டுக் கிடந்தது.

பல்லடம் நீதிமன்ற விசாரணைக் கைதிகள் திருப்பூா் கிளைச் சிறையிலும், கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் கிளைச் சிறையை மீண்டும் திறக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி பொதுமக்கள், வழக்குரைஞா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பாா்வையாளா் அறை, சமையலறை, குளியல் அறை, கழிப்பிடம், அலுவலக அறை ஆகியவை கட்டப்பட்டு நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி ஹரிராம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இவ்விழாவுக்கு கோவை சிறைத் துறை கண்காணிப்பாளா் செந்தாமரைக்கண்ணன் தலைமை வகித்தாா். பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தாா்.

காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன், கிளைச் சிறைக் கண்காணிப்பாளா் தனபாக்கியம், ஏட்டு பாலமுருகன், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT