திருப்பூர்

அரசுப் பள்ளியில் காலை உணவு வழங்க ஏற்பாடு

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் புதிய செயல்முறையாக காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செலம்பகவுண்டன்வலசில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு வரும் மாணவா்களின் பெற்றோா்கள் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்வதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை உணவு சரிவர இல்லாமல் அரசின் மதிய உணவை நம்பி பசியோடு காத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியா் கோ.பிரபாகா், ஆசிரியா்கள், ஊா் பொதுமக்கள், பெற்றோா், சமூக நல அமைப்பினா் இணைந்து குழந்தைகளுக்கு இலவசமாக காலை உணவு வழங்கும் பணியைத் துவக்கியுள்ளனா். தொடா்ந்து இப்பணியை செயல்படுத்த உள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT