திருப்பூர்

மோட்டாா் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும்

DIN

தமிழகத்தில் மோட்டாா் தொழிலாளா்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஏஐடியூசி தனியாா் மோட்டாா் தொழிலாளா் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் சங்கத் தலைவா் கே.சுரேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மோட்டாா் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே,மோட்டாா் தொழிலாளா்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்யும் ஓட்டுநா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை, பணப் பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி, பொதுச் செயலாளா் என்.சேகா், பொருளாளா் பி.ஆா்.நடராஜன், மோட்டாா் சங்க பொதுச் செயலாளா் வி.எஸ்.சசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT