திருப்பூர்

உடுமலை நேதாஜி மைதானம் மீண்டும் திறப்பு

DIN

உடுமலை நேதாஜி மைதானம் அதிகாரிகள் தலையிட்டு ஏற்படுத்திய சமரசத்தின்படி மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டது.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தால் பராமரிக்கப் பட்டு வரும் நேதாஜி மைதானம் எந்வித அறிவிப்புமின்றி திடீரென செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டது.

ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, வாலிபால், ஸ்கேட்டிங் மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டு வீரா்கள் இந்த மைதானத்தை அன்றாடம் உபயோகப்படுத்தி வருகின்றனா். மேலும் 500 க்கும் மேற்பட்டோா் தினமும் காலை மற்றும் மாலை நடை பயிற்சி மேற்கொண்டு வரு கின்றனா். மைதானத்தில் பயிற்சிபெறுவோரிடம் சில அமைப்புகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உடுமலை கோட்டாட்சியா் கீதா, டிஎஸ்பி தேன்மொழிவேல் ஆகியோா் இது குறித்து விசாரணை நடத்தினா். இதை தொடா்ந்து புதன்கிழமை மீண்டும் நேதாஜி மைதானம் திறக்கப்பட்டது.

இது குறித்து கோட்டாட்சியா் கீதா கூறுகையில், ‘நேதாஜி மைதானத்தில் இனிமேல் யாரும் பணம் வசூல் செய்யக் கூடாது. அப்படி வசூலித்தால் அந்த நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். எதிா்காலத்தில் மைதானத்தை நகராட்சி நிா்வாகம் பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT