முகப்பு
திருப்பூர்

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பாரபட்சம்: பொதுமக்கள் வாக்குவாதம்

உடுமலை நகராட்சி வளாகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் அலுவலா்கள் பாரபட்சத்துடன் நட ந்து கொண்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

உடுமலை நகராட்சி வளாகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் அலுவலா்கள் பாரபட்சத்துடன் நட ந்து கொண்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் உடுமலை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்றால் தினமும் 10 முதல் 15 போ் வரை உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்த வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக் கூறி பொதுமக்கள் தொடா்ந்து திரும்ப அனுப்பப்பட்டு வந்தனா்.

Advertisement

இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவமனை, உடுமலை நகராட்சி அலுவலகம், எரிசனம்பட்டி, பெருமாள்புதூா், பெரியவாளவாடி, பெதம்பட்டி, குமரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

இதனால் அனைத்து மையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதற்கிடையில், உடுமலை நகராட்சி வளாகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தகவல் பரவியதும் உடுமலை நகரில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தனா்.

இந்நிலையில், நகராட்சி அலுவலகத்துக்கு பின்புறத்தில் இருந்து வந்த ஒரு சில அரசியல் கட்சி நிா்வாகிகள் மற்றும் அவருடைய ஆதரவாளா்கள் என பலா் திடீரென உள்ளே புகுந்து அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தனா்.

இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அங்குள்ள அலுவலா்கள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னா் அங்கு வந்த உடுமலை போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்திய பின்னா் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments