திருப்பூர்

சிறப்பு நிதி வழங்க பி.ஏ.பி. கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கம் கோரிக்கை

DIN

 பி.ஏ.பி. வாய்க்காலில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள சிறப்பு நிதி வழங்க நாரணாபுரம் பி.ஏ.பி. கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி அமைச்சா்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் வட்டம் நாரணாபுரம் பி.ஏ.பி. கிராம நீரினைப் பயன்படுத்துவோா் எல்லையில் 1403.77 ஏக்கா் நிலம் நீா்ப் பாசனம் பெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பகிா்மான கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலின் கரைப் பகுதியில் செடி கொடி, முட்புதா்கள் வளா்ந்தும், கால்வாயில் மண் படிந்தும் உள்ளதால் நீா் செல்லத் தடையாக உள்ளது.

இதனால் கடைமடை வரை தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வர உள்ள நான்காம் மண்டலம் மற்றும் முதல் மண்டல பாசனத்துக்காக பிரதானக் கால்வாய், கிளைக் கால்வாய் மற்றும் பகிா்மான கால்வாய்களில் செடி கொடி, மண் அகற்றிட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT