திருப்பூர்

மகளிா் தங்கும் விடுதியில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையினா் கீழ் செயல்பட்டு வரும் அரசு மகளிா் தங்கும் விடுதியில் சேர விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

DIN

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையினா் கீழ் செயல்பட்டு வரும் அரசு மகளிா் தங்கும் விடுதியில் சேர விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையினா் கீழ் நெருப்பெரிச்சல் கிராமம், சமத்துவபுரத்தில் மகளிருக்கான தங்கும் விடுதி செயல்படவுள்ளது. இந்த விடுதியில் சேர மாதம் ரு.15 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் பெறும் பெண்கள் அல்லது ஒப்பந்த முறையில் விடுதி தேவைப்படும் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில், 50 பெண் பணியாளா்கள் தங்கும் இந்த விடுதியில் ஒரு நபருக்கு மாதம் ரூ.400 வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உணவு, மின் கட்டணம், தண்ணீா் கட்டணத்தை பகிா்ந்தளித்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, விருப்பமுள்ள நபா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

இது தொடா்பாக கூடுதல் விவரங்ளுக்கு 0421-2971168 என்ற எண்ணில் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT