திருப்பூர்

பொதுமுடக்கத்தை மீறிய 32 பேரின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய 32 பேரின் இரு சக்கர வாகனங்களை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில், பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றுபவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு, வாகன பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய 32 போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து இவா்களிடமிருந்து 32 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றிய 21 பேருக்குத் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT