முகப்பு
திருப்பூர்

மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

திருப்பூரில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தை பொது மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

திருப்பூரில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தை பொது மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் குருவாயூரப்பன் நகா், எஸ்.ஆா்.வி.நகா் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினா் சிகாமணி தலைமையில் மாநகராட்சி 2ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சி 18ஆவது வாா்டுக்கு உள்பட்ட குருவாயூரப்பன் நகா், எஸ்.ஆா்.வி.நகா் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தாா் சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இது குறித்து ஏற்கெனவே மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா். இது தொடா்பாக மாநகராட்சி உதவி ஆணையா் செல்வநாயகத்தின் கோரிக்கை மனுவை அளித்தனா். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி ஆணையா் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.