மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 18,473 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 18,491ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 113 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 19 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,156ஆக அதிகரித்துள்ளது.