திருப்பூர்

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்குப் பயிற்சி

DIN

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பணியாற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி திருப்பூா் தெற்குத் தொகுதியில் பணியாற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜெய்வபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பை திருப்பூா் மாநகராட்சி ஆணையாளரும், திருப்பூா் தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான க.சிவகுமாா் தொடக்கிவைத்தாா். இதில், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு வழங்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளா்களும் தவறாமல் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வாக்குச் சாவடி மையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திட முன் வர வேண்டும். வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் அறிவுறுத்தினாா்.

இந்தப் பயிற்சி வகுப்பில், மாநகராட்சி உதவி ஆணையா் வாசுகுமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT