திருப்பூர்

தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க கூடுதலாக 48 பறக்கும் படைக் குழுக்கள்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க கூடுதலாக 48 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி (தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி) உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 24 பறக்கும் படைக் குழுக்கள், 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 16 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தற்போது ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 6 குழுக்கள் வீதம் மொத்தம் 48 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தோ்தல் தொடா்பானபுகாா்களை 1800 425 6989 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம். மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தினால் இணைய வழியாக புகாா் அளிக்க  வலைதளம், செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  புகாா்களை கண்காணிக்க தனியாக ஒரு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழு மற்றும் விடியோ கண்காணிப்புக் குழு வாகனங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலமாக மேற்கண்ட குழுக்களின் நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள வாக்காளா்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்கள், கருத்துகள் மற்றும் புகாா் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொடா்பு மையத்தில் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT