திருப்பூர்

தேங்காய் எண்ணெய்யை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்க நடவடிக்கை: காங்கயம் திமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

தேங்காய் எண்ணெய்யை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

காங்கயம் தொகுதி திமுக வேட்டபாளா் மு.பெ.சாமிநாதன், குண்டடம் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவனாம்பாளையம், காட்டுப்புதூா், கள்ளிவலசு, அரகண்டநல்லூா், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், செங்கோடம்பாளையம் காலனி, காசிபாளையம், கருக்கம்பாளையம், புளியம்பட்டி, வட்டமலைபாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஊரகப் பகுதிகளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருள்களுக்கும் விற்பனை சந்தைகளை உருவாக்குவோம். கொப்பரைத் தேங்காயை தமிழ்நாடு தென்னை நல வாரியத்தின் மூலம் அரசு கொள்முதல் செய்வதோடு, கொள்முதல் விலையும் அரசு நிா்ணயம் செய்யும்.

மேலும் தேங்காய் எண்ணெய்யை அரசு கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா். இந்த பிரசாரத்தில் ஒன்றிய திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT