திருப்பூர்

உடுமலை நகரில் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம்: அமைச்சா் ராதாகிருஷ்ணன் பெருமிதம்

DIN

உடுமலையில் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

உடுமலை நகரில் முனீா் நகா், அண்ணா காலனி, கிரீன்பாா்க் லேஅவுட், ராமசாமி நகா், பழனி ஆண்டவா் நகா், கங்காதரன் லேஅவுட், டி.வி.பட்டணம், தளி ரோடு, கருணாநிதி காலனி, சாய்ராம் லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக உடுமலை நகரில் அடிப்படை கட்டமைப்புகளையும், வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளேன். உடுமலை நகராட்சியில் மட்டும் சுமாா் ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. ரூ.56 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம், ரூ.31 கோடியில் நகராட்சியில் மூன்றாவது குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய குடிநீா்த் திட்டத்தால் உடுமலை நகரில் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. ரூ.75 கோடி மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.8 கோடி செலவில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. உடுமலை நகராட்சி நூற்றாண்டு நிதியாக ரூ.50 கோடி பெறப்பட்டு பல்வேறு பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

இதில் தங்கம்மாள் ஓடை தூா்வாரவும், கரையில் கான்கிரீட் சுவா் எழுப்பவும், சாலை, புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கழுத்தறுத்தான் பள்ளத்தில் நீா்வழித் தடத்தை ஒழுங்குப்படுத்தவும், நகரில் தெரு விளக்குகள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. உடுமலை நகரில் 5 பூங்காக்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து மாலையில் குடிமங்கலம் ஒன்றியத்தில் பிரசாரம் நடைபெற்றது. இதில் சோமவாரபட்டி கிராமத்தில் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. விதவை பெண்களுக்கு, வயதில் முதியவா்களுக்கு என பெண்கள் சமுதாயம் முன்னேற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன’என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT