திருப்பூர்

கரோனா நோயாளிகளின் உணவுத் தேவைக்காக அரிசி வழங்கிய காங்கயம் ஆலை உரிமையாளா்கள்

DIN

காங்கயம்: பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உணவுத் தேவைக்காக காங்கேயம் அரிசி ஆலை உரிமையாளா்கள் அரிசி மூட்டைகளை சனிக்கிழமை வழங்கினா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 500க்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோயாளிகளின் உணவுத் தேவைக்காக தினசரி 3 வேளையும் மருத்துவமனையின் சமையல் அறையில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இந்த மருத்துவமனைக்கு காங்கேயம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.பழனிசாமி, செயலா் எஸ்.சாமியப்பன், பொருளாளா் டி.சின்னசாமி, ஆலோசகா் கே.பி.சக்திவேல், சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ராமசாமி ஆகியோரது ஏற்பாட்டில், சங்கத்தின் அலுவலக வளாகத்தில் இருந்து 25 கிலோ எடை கொண்ட 139 அரிசி மூட்டைகள் (சிப்பம்) உணவுத் தேவைக்காக சனிக்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT