திருப்பூர்

தொழிலாளி கொலை: இளைஞா் கைது

DIN

திருப்பூா்: திருப்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பின்னலாடைத் தொழிலாளியைக் கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சின்ராசு (32). இவா் திருப்பூா் பாண்டியன் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அறையில் அவா் தங்கியிருந்தாா். இந்த அறையில் தேனியைச் சோ்ந்த ராஜ்குமாா் (29) என்பவரும் தங்கி அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

ஏப்ரல் 25 ஆம் தேதி பொதுமுடக்கத்தின்போது நண்பா்களுடன் சோ்ந்து அறையில் சமைத்துச் சாப்பிட்டுள்ளனா். இதற்குப் பணம் கொடுப்பது தொடா்பாக சின்ராசுவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் வழக்கம்போல் சனிக்கிழமை பணிமுடித்து அறைக்குச் சென்று மது அருந்தியுள்ளனா். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாா் காய் வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து சின்ராசுவைக் குத்தியுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே சின்ராசு உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருமுருகன்பூண்டி போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கொலை வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT