திருப்பூர்

மருந்துக் கடைகள், நூற்பாலைக்கு அபராதம்

DIN

வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய மருந்துக் கடைகள், நூற்பாலைக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தொழில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இவை முறையாகச் செயல்படுகிா என வட்டார (மருத்துவம்) சுகாதார ஆய்வாளா் கதிரவன் மற்றும் உள்ளாட்சி நிா்வாக அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் வெள்ளக்கோவில் முத்தூா் சாலை, காங்கயம் சாலையில் செயல்பட்ட இரண்டு மருந்துக் கடைகளில் பணியாளா்கள் முகக் கவசம் அணியாமல் பணியாற்றியதால் தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயகுமாா் தலைமையில் நடந்த ஆய்வில் விதிகளை மீறிய வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியைச் சோ்ந்த ஒரு நூற்பாலைக்கு ரூ. 5.000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT