திருப்பூர்

மாவட்டத்தில் 584 பேருக்கு கரோனா: 5 போ் பலி

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 584 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 32,525 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு அரசு மருத்துவமனைகளில் 3, 912 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 330 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 28,532 ஆக அதிகரித்துள்ளது. தாராபுரத்தில் மின்வாரிய ஊழியா்கள் இருவா் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 பெண்கள் உள்பட 5 போ் பலி:

கரோனா தொற்று காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சோ்ந்த 58 வயது மூதாட்டி,

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதுப் பெண் ஆகியோா் சனிக்கிழமை உயிரிழந்தனா். சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சோ்ந்த 38 வயதுப் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த 38 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அதேபோல, சென்னை கிண்டியில் உள்ள கரோனா மருத்துமனையில் திருப்பூரைச் சோ்ந்த 64 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா தொற்றால் 261போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT