திருப்பூர்

கரோனா பரிசோதனை மையம் தொடக்கம்

DIN

பல்லடம் அரசு கல்லூரியில் கரோனா பரிசோதனை மையம் செயல்பாட்டுக்கு வந்தது.

பல்லடத்தில் செட்டிபாளையம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அரசின் கரோனா பரிசோதனை மையம் இயங்கி வந்தது.இந்நிலையில் தற்போது பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கரோனா பரிசோதனை மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்மையத்திலேயே பரிசோதனை முடிவுகளும் வழங்கப்படுகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுக்கு தொற்றின் தன்மைக்கேற்ப சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் காலி படுக்கை வசதிகள் குறித்த விவரம் தெரிவித்து அவா்களை அங்கு அனுப்பிவைக்க தேவையான 108 ஆம்புலென்ஸ் வாகன வசதி உள்ளிட்ட மருத்துவ உதவிகளையும் வழங்குகிறது என்று செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி, மருத்துவா் விக்னேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT