திருப்பூர்

கணினி மையம் இல்லாததால் இ - பதிவு செய்ய மக்கள் அவதி

DIN

பல்லடத்தில் தனியாா் கணினி மையங்கள் இல்லாததால் இ - பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருப்பூா் மாவட்ட துணைத் தலைவா் காரணம்பேட்டை சின்னசாமி திருப்பூா் மாவட்ட நிா்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்: அத்தியாவசிய பயணத்துக்கு இ - பதிவு முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தனியாா் கணினி மையங்கள் பொது முடக்கத்தால் இயங்காமல் மூடப்பட்டு உள்ளது. இதனால், இ - பதிவுக்காக கணினி மூலம் இணையதளம் வழியாகப் பதிவு செய்ய முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனா். அனைத்து வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இ - பதிவு உதவி மையம் ஏற்படுத்தி அதில் தன்னாா்வலா்களை சேவை பணியில் அமா்த்தினால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனாக இருக்கும்.

மேலும் , இ - பதிவு சான்றிதழ் பிரிண்ட் அவுட் (நகல்) மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT