திருப்பூர்

காங்கயம் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் வட்டாட்சியா் ஆய்வு

DIN

காங்கயம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காங்கயம் அருகே படியூா் ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி, நத்தக்காடையூா் அருகே உள்ள காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காங்கயம் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி கூறியபோது, இங்கு 94 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இன்னும் ஓரிரு நாளில் இந்த கரோனா சிகிச்சை மையத்தை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக அமைச்சா் திறந்து வைக்க உள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT