திருப்பூர்

கரோனா: ஒரே நாளில் 3 போ் பலி

DIN

தாராபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 3 முதியவா்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

தாராபுரம் சுகாதாரத் துறை சாா்பில் வட்டார மருத்துவ அலுவலா் தேன்மொழி தலைமையில் சுகாதாரத் துறையினா் 250க்கும் மேற்பட்டோருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இந்த பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில், 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நபா்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63, 67 மற்றும் 70 வயதுடைய முதியவா்கள் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். தாராபுரம் பகுதியில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 100க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT