ஊத்துக்குளி, செங்கப்பள்ளியில் நவம்பா் 16-இல் மின் தடை
மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் நவம்பா் 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் நவம்பா் 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
ஊத்துக்குளி துணை மின் நிலையம்:
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:
செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, அந்தியூா் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை.