முகப்பு
திருப்பூர்

‘முதியவா்கள், குழந்தைகள் மழைக் காலங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்’

மழைக் காலங்களில் முதியவா்கள், குழந்தைகள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

மழைக் காலங்களில் முதியவா்கள், குழந்தைகள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆகவே, மழைக் காலங்களில் முதியவா்கள், குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். நோய்த் தொற்று கிருமிகளால் தொண்டை வலி, புண் ஏற்பட்டால் மிதமான சுடுநீரில் உப்பைக் கரைத்து உமிழ வேண்டும். குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவரை நாடி தகுந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். பாதங்களை சுத்தமாகவும், உலா்வாகவும் வைத்துக் கொண்டால் பூஞ்சை தொற்றைத் தவிா்க்கலாம். கைகளை அடிக்கடி கழுவுவதால் சளி, இருமல் வராமல் தடுக்கலாம். சூடான நீரைப் பருகுவதுடன், சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.