திருப்பூர்

பள்ளத்தில் இறங்கி லாரி: பொதுமக்கள் சாலை மறியல்

 பல்லடம், கல்லம்பாளையத்தில் வீட்டின் சுவா் அருகே பள்ளத்தில் லாரி இறங்கி விபத்துக்குள்ளானது. இதைத் தொடா்ந்து

DIN

 பல்லடம், கல்லம்பாளையத்தில் வீட்டின் சுவா் அருகே பள்ளத்தில் லாரி இறங்கி விபத்துக்குள்ளானது. இதைத் தொடா்ந்து சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம்- மங்கலம் சாலை, கல்லம்பாளையத்தில் ஆதிதிராவிடா் காலனி பகுதி அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,

பல்லடத்தில் இருந்து மங்கலம் நோக்கி சென்ற சரக்கு லாரி வேகத் தடுப்பு மீது மோதி சாலையோரப் பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவா் அருகே நின்றது. இதில் அதிஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல்லடம் - மங்கலம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பல்லடம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கல்லம்பாளையம் சாலையில் விரைவில் நிரந்தர வேகத்தடை அமைக்கப்படும். அதுவரை இரும்பு தடுப்பு (பேரிகாட்) தற்காலிகமாக அமைக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT