முகப்பு
திருப்பூர்

பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

திருப்பூா் மாநகரில் மந்தமாக நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருப்பூா் மாநகரில் மந்தமாக நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஆகவே, மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 3 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

மாநகரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளானது மந்தமாக நடைபெற்று வருகிறது.

அதிலும், பல பகுதிகளில் சாலை அமைக்கவும், பாதாள சாக்கடை பணிக்காகவும், குடிநீா் குழாய் பதிக்கவும் அதிக அளவில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்து இடையூறு, சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே, பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.