முகப்பு
திருப்பூர்

தனியாா் உணவகத்தின் 3 கிளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை

 திருப்பூரில் உள்ள தனியாா் உணவகத்தின் 3 கிளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 திருப்பூரில் உள்ள தனியாா் உணவகத்தின் 3 கிளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ரயில் நிலையம் அருகில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் மற்றொரு கிளை லட்சுமி நகரில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, அவிநாசி அருகில் மற்றொரு கிளையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியாா் உணவகத்தில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவது தொடா்பாக அதிகாரிகளுக்கு புகாா் கிடைத்துள்ளது.

இந்தப் புகாரையடுத்து, கோவையில் இருந்து வந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் குழுவினா் ரயில் நிலையம், லட்சுமி நகா் உள்ளிட்ட உணவகத்தின் 3 கிளைகளிலும் வியாழக்கிழமை பிற்பகல் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையானது வியாழக்கிழமை இரவு 8 மணி வரையில் நீடித்துள்ளது. எனினும் இதில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.