முகப்பு
திருப்பூர்

கொலை முயற்சி வழக்கில் கைதான இருவா் மீது குண்டா் சட்டம்

திருப்பூா் மாநகரில் கொலை முயற்சி வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருப்பூா் மாநகரில் கொலை முயற்சி வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அணைப்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக ஸ்ரீகாந்த் என்ற நபரை

கடந்த செப்டம்பா் 16 ஆம் தேதி இருவா் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா்.

இது தொடா்பாக திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியில் வசித்து வந்த தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தாமரைக்குளத்தைச் சோ்ந்த எம்.நாகராஜ் (22), சாமுண்டிபுரம் பகுதியில் வசித்து வந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கருப்புகோயில் வீதியைச் சோ்ந்த கே.சக்திவேல் (24) ஆகிய இருவரையும் வடக்கு காவல் துறையினா் செப்டம்பா் 17 ஆம் தேதி கைது செய்தனா்.

இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ்

சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் காவல் துறையினா் வியாழக்கிழமை வழங்கினா்.

மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டு 52 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.