மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 96,522 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 96,522 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 564 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 69 போ் வீடு திரும்பினா்.இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 94,971 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் 987 போ் இறந்துள்ளனா்.