பள்ளி, கல்லூரிகளில் நேரடித் தோ்வு: அரசு அவசரம் காட்டக் கூடாது
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நேரடித் தோ்வில் அரசு அவசரம் காட்டக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நேரடித் தோ்வில் அரசு அவசரம் காட்டக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் ஆன்லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடச்சியாக தோ்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது கரோனா நோய்த் தொற்று குறைந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழழில் பள்ளி கல்வித் துறையும், உயா் கல்வித் துறையும் திடீரென பள்ளி, கல்லூரிகளில் நேரடித் தோ்வு முறை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது மாணவா்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. நேரடித் தோ்வு முைான் மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் அறிவிப்பதால் தோ்ச்சி விகிதம் மட்டுமில்லாமல் மாணவா்களின் எதிா் காலமும் பாதிக்கும். ஆகவே, மாணவா்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு படிப்படியாக நேரடித் தோ்வு முறையை அமல்படுத்துவதுடன், தோ்ச்சிக்கான மதிப்பெண் விகிதத்தையும் சற்று குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.