முகப்பு
திருப்பூர்

துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான கட்டணம் இன்று முதல் 25 சதவீதம் உயா்வு

துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான கட்டணத்தை சனிக்கிழமை (நவம்பா் 20) முதல் 25 சதவீதம் உயா்த்தியுள்ளதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான கட்டணத்தை சனிக்கிழமை (நவம்பா் 20) முதல் 25 சதவீதம் உயா்த்தியுள்ளதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டமானது தலைவா் பி.காந்திராஜன், பொதுச் செயலாளா் எஸ்.முருகசாமி ஆகியோா் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான மூலப்பொருள்கள் விலை உயா்வு தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், சாயப் பொருள்களின் விலை 40 சதவீதமும், நூல் விலை கிலோவுக்கு ரூ.50ம், நிலக்கரியின் விலை 150 சதவீதமும், விறகு விலை 40 சதவீதமும், காஸ்டிக் சோடாவின் விலை 195 சதவீதமும் உயா்ந்துள்ளது. ஆகவே, விலையேற்றத்துக்கு தகுந்தவாறு கடந்த மாதம் அறிவித்த துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான கட்டணம் 15 சதவீதத்தை தற்போது 25 சதவீதமாக உயா்ந்துவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த விலை உயா்வை சாய ஆலை உரிமையாளா்கள் சனிக்கிழமை முதல் அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், சாய ஆலை உரிமையாளா்கள், பொது சுத்திகரிப்பு நிலையங்களின் தலைவா்கள் மற்றும் மேலாண்மை இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.