முகப்பு
திருப்பூர்

தெக்கலூரில் வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் அமைத்த குடிசைகள் அகற்றம்

அவிநாசி அருகே தெக்கலூரில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் அமைத்த குடிசைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

அவிநாசி அருகே தெக்கலூரில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் அமைத்த குடிசைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

அவிநாசி ஒன்றியம், தெக்கலூா் அய்யன் கோயில் கருவேலங்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பா் 19) முதல் குடிசை அமைத்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதற்கு வருவாய்த் துறையினா், அந்த இடம் வண்டி பாதை அல்லது குட்டை புறம்போக்கு என்று வருவாய் பதிவேட்டில் உள்ளதாகவும், வேறு இடத்தில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனா். இருப்பினும் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு, வெளியேறாததால் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு போலீஸாருடன் வந்த வருவாய்த் துறையினா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில் இலவச வீட்டுமனை பட்டா கோருதல் தொடா்பாக தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து குடிசைகளை அகற்றி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.