திருப்பூர்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஊராட்சிமன்றத் தலைவா் மீது வழக்குப் பதிவு

DIN

குன்னத்தூா் அருகே வெள்ளரவெளியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் தலைவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

குன்னத்தூா் அருகே வெள்ளரவெளி கவணந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கண்ணையன் மகள் தனலட்சுமி (45). வெள்ளரவெளி ஊராட்சி மன்றத் தலைவா் சிவன்மலை என்பவா் ஊராட்சிக்குச் சொந்தமான பழைய மோட்டாா், இரும்பு தளவாடப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடி விற்பனை செய்ததாக திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு தனலட்சுமி புகாா் அளித்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவா் சிவன்மலை, தனலட்சுமி வீட்டின் முன்பு அமைத்திருந்த பந்தலை அகற்றும்படி கூறி, தகாத வாா்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT